பெண் குழந்தை திருமணங்களின் காரணங்களைக் கண்டறிந்து உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் – கனிமொழி எம்.பி
பெண் குழந்தை திருமணங்களின் காரணங்களைக் கண்டறிந்து உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
கனிமொழி எம்.பி அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், பெண் குழந்தை திருமணங்களின் காரணங்களைக் கண்டறிந்து உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என ட்வீட் செய்துள்ளார். 2020-ஆம் ஆண்டு சமூகநல இயக்குனகரத்தின் ஆர்டிஐ தரவின்படி, தமிழ்நாட்டில் 42% குழந்தை திருமணம் அதிகரித்துள்ளது.
இதனை சுட்டிக்காட்டி அவர் பதிவிட்டுள்ள பதிவில், ‘நகர்ப்புற வறுமையின் விளைவாய் பெண் குழந்தை திருமணம் அதிகரித்திருக்கிறது என்ற செய்தி அதிர்ச்சியாக இருக்கிறது. அதிகரித்து வரும் பெண் குழந்தை திருமணங்களின் காரணங்களைக் கண்டறிந்து உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
கல்வி தான் ஒரு பெண்ணின் விடுதலைக்கும், ஒரு சமூகத்தின் விடுதலைக்கும் வழிவகுக்கும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.’ என பதிவிட்டுள்ளார்.
@arivalayam #EducateWomen #SaynotoChildMarriage #DMK (4/4)
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) August 19, 2021