கிரிவலம் செல்லத் தடை- ஆட்சியர் உத்தரவு
ஏப்.,7 ஆம் தேதி திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா மின்னல் வேகத்தில் பரவி வரும் நிலையில் சமூக பரவலாக மாறாமல் தடுக்கும் விதத்தில் 144 தடை உத்தரவு நாடு முழுவது அமல்படுத்தப்பட்டு உள்ளது இதனால் மக்கள் தங்கள் வீடுகளிலே இருந்து வருகின்றனர்.இந்நிலையில் தமிழகத்தில் 400க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட உள்ளனர்.
இந்நிலையில் திருவண்ணாமலை: பவுர்ணமி தினத்தையொட்டி அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். அவ்வாறு ஏப்., 7 ஆம் தேதி பௌர்ணமியை அடுத்து பக்தர்கள் கிரிவலம் செல்லத்தடை விதித்து அம்மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அறிவித்துள்ளார்.மேலும் இது குறித்து கூறுகையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் திருவண்ணாமலையில் 7 ஆம் தேதி கிரிவலம் செல்ல பக்தர்களுக்குத் தடை விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.