ரூ.20 டோக்கன் தந்த அமமுகவுக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு பொருத்தமானது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
அனைத்து தேர்தல்களிலும் பயன்படுத்த குக்கர் சின்னத்தை நிரந்தரமாக தங்களுக்கே ஒதுக்கீடு செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என டிடிவி.தினகரன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் தேர்தல் ஆணையம் அளித்த பதிலில் தினகரன் கட்சி பதிவு செய்யப்படாத கட்சி,இதனால் குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது திட்டவட்டமாக தெரிவித்தது.இதன் பின்னர் நடைபெற்ற விசாரணையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குக்கர் சினத்தை ஒதுக்கி உத்தரவிட முடியாது என தீர்ப்பளித்தனர்.இந்நிலையில் எங்கள் தரப்பிற்கு குக்கர் சின்னம் கிடைக்காவிட்டால் வேறு சின்னத்தில் போட்டியிடுவோம் என தினகரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனால் உச்சநீதிமன்றம் தேனும் ஒரு சின்னத்தை பொதுச் சின்னமாக ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து, தேர்தல் ஆணையம் ஒதுக்கிய சின்னங்களில் ஒன்றான பரிசுப் பெட்டி சின்னத்தை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தேர்வு செய்தது. இதையடுத்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் பரிசுப்பெட்டி சின்னத்தை ஒதுக்கியது.
இந்நிலையில் பரிசுப்பெட்டி சின்னம் தொடர்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், ரூ.20 டோக்கன் தந்த அமமுகவுக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு பொருத்தமானது என்றும் இந்த முறை மக்கள் ஏமாற மாட்டார்கள் என்று கூறியுள்ளார் . அமமுகவினார் போட்டியிடும் தொகுதிகளில் டெபாசிட் இழப்பார்கள் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…