நெருக்கி வருகிறது கஜா புயல் …!பாம்பன் -கடலூர் இடையே இன்று கரையை கடக்கும் …!வானிலை ஆய்வு மையம்
பாம்பன் -கடலூர் இடையே நாகை அருகே இன்று மாலை கஜா புயல் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், கஜா புயல் சென்னைக்கு தென்கிழக்கே 410 கி.மீ. தொலைவிலும் நாகைக்கு வடகிழக்கே 480 கி.மீ. தொலைவிலும் உள்ளது. மேற்கு தென்மேற்கு திசையில் மணிக்கு 13 கிலோமீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது.சென்னைக்கு அருகே 380 கி.மீ, நாகை அருகே 400 கி.மீ. தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது. பாம்பன் -கடலூர் இடையே நாகை அருகே இன்று மாலை கஜா புயல் கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.