கார்கே, நேரு- காந்தி குடும்பத்தின் ரப்பர் ஸ்டாம்பாக செயல்படுவார் என்ற கருத்து தவறானது – ஜோதிமணி எம்.பி
காங், தலைவர் தேர்தலில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என ஜோதிமணி எம்.பி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி தலைவருக்கான தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுனா கார்கே மற்றும் சசி தரூர் ஆகியோர் போட்டியிட்டனர்.
இதில் தற்போது 9500 வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், மல்லிகார்ஜுன கார்கேவுக்கு சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவாகியுள்ளன. சசிதரூர் 1,072 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். இதனையடுத்து மல்லிகார்ஜுன கார்கே தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மோசடி நடந்ததாக கூறப்பட்ட நிலையில், இதுகுறித்து ஜோதிமணி எம்.பி விளக்கமளித்துள்ளார். அவர் கூறுகையில், காங், தலைவர் தேர்தலில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை; ஜனநாயக முறைப்படி கட்சி தலைவர் தேர்தலை காங்கிரஸ் நடத்தி உள்ளது.
தேர்தலை மிக நேர்மையாக நடத்தியதாக சசி தரூரே பாராட்டினார்; கார்கே, நேரு- காந்தி குடும்பத்தின் ரப்பர் ஸ்டாம்பாக செயல்படுவார் என்ற கருத்து தவறானது. Rss-ன் கைப்பாவையாக அரசே செயல்படுகிறது; மோடி,அமித்ஷா கைப்பாவையாக, ரப்பர் ஸ்டாம்பாக நட்டா செயல்படுகிறார்,எனவே அது குறித்து பாஜக பேச முடியாது என தெரிவித்துள்ளார்.