சென்னை பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ள #GetOutRavi என்ற போஸ்டர்..!
சென்னையில் ஜெமினி மேம்பாலம், எஸ் ஐ டி கல்லூரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் #GetOutRavi என்ற போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் தமிழ்நாடு அரசால் தயாரித்து அச்சிடப்பட்ட உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை என்றும் திராவிட மாடல், தமிழ்நாடு வார்த்தைகளை தவிர்த்து விட்டார் எனவும் குற்றசாட்டுகள் முன்வைக்கப்பட்டது.
இந்த நிலையில், ஆளுநர் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினும் விமர்சனங்களை முன்வைத்தார். இதனையடுத்து, முதல்வர் பேசிக் கொண்டிருந்த போதே ஆளுநர் சட்டப்பேரவையை விட்டு வெளியேறினார்.
ஆளுநரின் செயல்பாடு குறித்து பலரும் விமர்சித்து வரும் நிலையில், ட்விட்டரில் #GetOutRavi என்ற ஹேஸ்டெக் ட்ரெண்டாகி வந்தது. இதனையடுத்து, சென்னையில் ஜெமினி மேம்பாலம், எஸ் ஐ டி கல்லூரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் #GetOutRavi என்ற போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.