உள்ளாட்சி தேர்தல் பரபரப்புக்கு இடையே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 1965-ம் ஆண்டு முதல் 1970-ம் ஆண்டு வரை 6 முதல் 11-ம் வகுப்பு வரையில் சென்னை சேத்துப்பட்டில் அமைந்துள்ள சென்னை கிருத்துவக் கல்லூரி பள்ளியில் பயின்றார். 1970-ம் ஆண்டு பள்ளியில் பயின்ற மாணவர்களின் (get together) ஒன்று சேருதல் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவரான திமுக தலைவர் மு க ஸ்டாலின் கலந்துகொண்டார். பின்னர் 50 ஆண்டுகள் கழித்து 11-ம் வகுப்பில் அவரோட பயின்ற நண்பர்களை சந்தித்து ஒருக்கொருவர் தங்களை ஸ்டாலினுடன் அறிமுகம் செய்து கொண்டு மகிழ்ந்தனர்.
இந்நிலையில், ஸ்டாலினுடன் பள்ளியில் பயின்று விளையாடி மகிழ்ந்த நண்பர்களை அடையாளம் கண்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார், பிறகு பள்ளியை சுற்றிப் பார்த்ததுடன் பயின்ற வகுப்பில் நண்பர்களுடன் அமர்ந்து பழைய நினைவுகளில் நினைவூட்டி பேசிக்கொண்டனர். சுமார் 1 மணி நேரம் மட்டும் தான் பள்ளி நண்பர்களுடன் செலவிட்டு, அங்கிருந்து புறப்பட்டு சென்றார். ஸ்டாலின் பள்ளியில் பயின்ற காலக்கட்டத்தில் அவரது தந்தையும் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்தபோதும் எளிமையான, அமைதியான, மாணவராக இருப்பார் என, அவரோட பயின்ற நண்பர்கள் தெரிவித்தனர்.
மேலும் மாணவராக பள்ளியில் பயின்ற காலத்திலேயே ஸ்டாலின் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றதை நினைவுப்படுத்தும் அவரது நண்பர்கள் பள்ளியில் பயின்ற போதே அவர் அரசியல் ஆர்வத்துடன் இருந்ததாக குறிப்பிட்டனர்.
டெல்லி : நடப்பு ஐபிஎல் தொடரில் நெற்றிரவு நடைபெற்ற போட்டியில் பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள் மோதியது. இதற்கான டாஸில்…
சென்னை : முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…