பள்ளி மாணவர்களை வெயிலில் விளையாட வையுங்கள் – பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு
மாணவர்கள் வைட்டமின் டி சத்துகளை பெறும் வன்னம் மாலையில் விளையாட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
அதாவது பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில்,ஒய்வு நேரங்களில், இடைவேளைகளில் மாணவர்களை திறந்த வெளி மைதானங்களில் மாணவர்களை சூரிய வெளிச்சத்தில் விளையாட வையுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளது.இதனை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் உறுதிப்படுத்த வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.வைட்டமின் டி குறைபாடு காரணமாக உடலில் அதிக அளவில் சோர்வு ஏற்படுகிறது.இதன்காரணமாகவே பள்ளி கல்வித்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.