இன்று முதல் 27 மாவட்டங்களுக்கு இ-பாஸ் பெற்று பயணிக்க அனுமதி!
இன்று முதல் கொரோனா தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களுக்குள் இ-பாஸ் பெற்று பயணிக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ஜூன் 21ஆம் தேதி வரை போடப்பட்டிருந்த ஊரடங்கு ஜூன் 28-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி கொரோனா தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி அரியலூர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், கள்ளகுறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர், விருதுநகர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய இந்த 27 மாவட்டங்களுக்கு இடையே உள்ள மக்கள் திருமண நிகழ்வுகளுக்கு இ-பாஸ் பெற்று பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதற்கான இ-பாஸ் அந்தந்த மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரிடம் இருந்து இணைய வழியாக (https://eregister.tnega.org) விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவசர காரணங்களுக்காக நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் ஆகிய பகுதிகளுக்கு பயணிப்பதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் இ-பாஸ் பெற்று செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.