ஜெர்மனி பிரதமருக்கு தமிழகம் மீது இவ்ளோ பாசமா ! அரசு பேருந்து துறையை சீர்திருத்த சுமார் ரூ.1600 கோடி முதலீடு செய்யப்படும் -ஏஞ்சலா மெர்கல்
தமிழக அரசு போக்குவரத்து துறையை சீர்திருத்த இந்திய மதிப்பில் ரூ.1600 கோடி ரூபாயை ஒதுக்க உள்ளதாக ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் தெரிவித்துள்ளார்.
ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.இந்தியா வந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து பிரதமர் மோடி மற்றும் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
இந்த நிலையில் இன்று டெல்லியில் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில்,தமிழகத்தில் அரசு பேருந்து துறையை சீர்திருத்த சுமார் ரூ.1600 கோடி முதலீடு செய்யப்படும் என்று தெரிவித்தார்.மேலும் டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைக்க டீசல் பேருந்துக்கு பதில் மின்னணு பேருந்துகள் போன்ற நல்ல வழியை காணவேண்டும் என்று தெரிவித்தார்.