மருத்துவ கழிவுகளை அகற்ற ஜெர்மன் – சென்னை ஐஐடி கூட்டு கண்டுபிடிப்பு!

Default Image

மருத்துவ கழிவுகளை அகற்றுவதற்காக ஜெர்மன் மற்றும் சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் சேர்ந்து புதிய வழிமுறைகளை உருவாக்கி உள்ளனர்.

வேதிப்பொருட்கள், தனிப்பட்ட பராமரிப்பு தயாரிப்புகள், மருத்துவ கழிவுகள் மேலாண்மை ஆகியவற்றை கையாள்வதில் தற்போது பெரும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கும் மனிதனுக்கும் பெரும் ஆபத்து விளைவிக்கக்கூடிய இந்த மருத்துவ கழிவுகளை தற்பொழுது ஜெர்மனியை சேர்ந்த ஸ்டட்கார்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் பாதுகாப்பு அளிக்கும் முறையை கண்டறிந்துள்ளனர். இந்த மருத்துவ கழிவுகளை வைத்து உரம் தயாரித்து, கழிவுநீர் கழிவுகள் மற்றும் ஆர்கானிக் கழிவுகளுடன் மிகக்குறைந்த சரி உள்ள ரசாயன கலவையை கலந்து மருத்துவ கழிவுகளை பாதுகாப்பாக அகற்றும் வழிகளையும் ஏற்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக பல ஆய்வுகளை நடத்தி புதிய வழிகளை அடையாளம் கண்டுள்ளனர். சென்னை ஐஐடி கட்டடக்கலை பொறியியல் பேராசிரியர், தாமஸ் ஜெர்மனியை சேர்ந்த சுகாதார துறை பேராசிரியர் மார்ட்டின் ஆகியோர் மருத்துவ கல்வி அளிப்பதற்கான அறிவியல் நடைமுறைகளையும் அறிவித்துள்ளனர். மேலும் மக்கள்தொகை பெருக்கத்திற்கு ஏற்ப ஒவ்வொரு ஆண்டும் கழிவுநீர் தொட்டிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சரியான மேலாண்மை முறைகளை பின்பற்றாமல் அவை சுற்றுச் சூழலுக்கு எதிராக மாறுகின்றன என பேராசிரியர் பிலிப் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்