ஆண்களே உஷார்! டிக்டாக் மூலம் இளம்பெண் விரித்த வினோத வலையில் சிக்கி ரூ.97,000-ஐ இழந்த இளைஞர்!

Published by
லீனா

டிக்டாக் மூலம் ரூ.97,000-ஐ இழந்த இளைஞர். இளைஞரை ஏமாற்றிய இளம்பெண் சுசி கைது.

இன்று அதிகமான இளைஞர்கள் மற்றும் பெண்கள் டிக்டாக்கிற்கு அடிமையாகியுள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும். தங்களுடைய அதிகமான நேரத்தை டிக் டாக்கில் தான் செலவிடுகின்றனர். தற்போது ஊரடங்கை சாதகமாக பயன்படுத்தி, வீட்டில் இருப்பவர்கள் அதிகமாக இணையதளத்தில் தான் உலாவி வருகின்றனர். 

இந்நிலையில், மதுரையை சேர்ந்த 23 வயதான இளைஞர் ராமசந்திரன். இவர் மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். தற்போது விடுமுறை என்பதால், வீட்டில் இருக்கும் ராமசந்திரன், டிக்டாக் மற்றும் முகநூலில் அதிகமாக தனது நேரத்தை செலவிட்டு வந்துள்ளார். 

இதனையடுத்து, டிக்டாக்கில் திருப்பூரை சேர்ந்த சுசி என்கின்ற பெண், அம்முக்குட்டி என்கின்ற பெயரில் ராமசந்திரனுக்கு அறிமுகமாகியுள்ளார். இதனையடுத்து, சுசி என்கின்ற அம்முக்குட்டியிடம் இவர் தனது அதீத அன்பை வெளிக்காட்டிய நிலையில், இவர்கள் இருவரும் முகநூல் பக்கத்திலும் உரையாடி வந்துள்ளனர். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சுசி, தனது  குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும், எனவே, மருத்துவமனை செலவுக்கு பணம் வேண்டும் என்றும் கூறியுள்ளார். 

அவரது பேச்சை நம்பிய ராமசந்திரன், சுசியின் வங்கி கணக்கிற்கு ரூ.97,000 பணத்தை அனுப்பி வைத்துள்ளார். பணத்தை  பெற்றுக் கொண்ட சுசி அவருடன் பேசாமல் விட்டதுடன், இணைய பக்கத்திலும் தலைகாட்டாமல் இருந்துள்ளார். இதனையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராமசந்திரன், மதுரை எஸ்.எஸ்.காலனி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். 

அவர் அளித்த புகாரின் பேரில், போலீசார் சுசி மீது வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து தேட துவங்கினர். திருப்பூர், ஆலங்காடு பகுதியில் உள்ள அவரது வீட்டில் பதுங்கி இருந்த சுசியை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர் மோசடி செய்ய பயன்படுத்திய விலையுயர்ந்த செல்போனை பறிமுதல் செய்த போலீசார், அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி, சிறையில் அடைத்தனர். 

Published by
லீனா

Recent Posts

பறக்கவிட்ட பட்லர்..சுழற்றி அடித்த கில்! ராஜஸ்தானுக்கு குஜராத் வைத்த டார்கெட்?

பறக்கவிட்ட பட்லர்..சுழற்றி அடித்த கில்! ராஜஸ்தானுக்கு குஜராத் வைத்த டார்கெட்?

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

35 minutes ago

பத்மபூஷன் விருது வாங்கிய அஜித்…வாழ்த்து தெரிவித்த இபிஎஸ், நயினார் நாகேந்திரன்!

சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…

1 hour ago

RRvsGT : பந்துவீச்சை தேர்வு செய்த ராஜஸ்தான்! அதிரடி காட்டுமா குஜராத்?

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

3 hours ago

பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்குமார்!

டெல்லி : ஆண்டுதோறும்  எந்த ஒரு துறையிலும், சிறந்து விளங்கும் ஒருவருக்கு, இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான (2025)…

3 hours ago

மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார் மனோ தங்கராஜ்..!

சென்னை : திமுக தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை இலாகாக்களில் மாற்றம்…

3 hours ago

“கரெக்ட்டா ஃபாலோ பண்ணுங்க” உக்ரைனுக்கு எச்சரிக்கை விட்ட ரஷ்யா!

ரஷ்யா : மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போர் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இன்னும் நிற்காமல் தொடர்ச்சியாக நடந்து வருவது…

4 hours ago