ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு – அவகாசத்தை நீட்டித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!
ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்விற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு.
அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு 2022-2023ம் கல்வி ஆண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணைய தளம் மூலம் இம்மாதம் நடத்த பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்யப்பட்டது.
இதன்பின், பொதுமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க உள்ள ஆசிரியா்கள் ஏப்.27 முதல் தங்கள் விண்ணப்பங்களை பதிவேற்றலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.இந்த நிலையில், அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்விற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை 5 மணி உடன் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நிறைவடைய இருந்த நிலையில், அதனை இன்று மாலை வரை நீட்டித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. எனவே, பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்கவுள்ள ஆசிரியர்கள் இன்று மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.