இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கியது!

Engineering cousling

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்கியது. 

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் பொறியியல் கல்லூரிகளில், இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்கியது. முதல் சுற்று பொது கலந்தாய்வு இன்று முதல் ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. அதன்படி, www.tneaonline.org என்ற இணையதளம் வாயிலாக மணவார்கள் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.

மொத்தத்தில் தமிழ்நாடு முழுவதும் 430 பொறியியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 378 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. தரவரிசையில் 22 ஆயிரத்து 761 இடம் வரையுள்ள மாணவர்கள் பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்கிறார்கள். ஆன்லைன் மூலம் கலந்தாய்வில் பங்கேற்று மாணவர்கள் தாங்கள் விரும்பிய கல்லூரியை தேர்வு செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்