மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக கொடியை பயன்படுத்தி அறிக்கை வெளியிட்டுள்ள சசிகலா.
இன்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்த தினத்தை சென்னை தி நகரில் உள்ள இல்லத்திலேயே இருந்து சசிகலா ஜெயலலிதா படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். இதன்பின் பேசிய அவர், ஜெயலலிதாவின் உண்மையான உடன்பிறப்புகள் ஒன்றிணைந்து செயல்பட்டு தேர்தலில் வெற்றிப்பெற வேண்டும் என்று தெரிவித்திருந்தார். மேலும் 100 ஆண்டுகளுக்கு நம்முடைய ஆட்சி இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், தற்போது மீண்டும் அதிமுக கொடியை பயன்படுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் சின்னம்மா, ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், அச்சமயம் விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் இனிப்பு வழங்கி புரட்சித் தலைவி பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளனர். சசிகலா ஆவார்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிமுக கொடி மீண்டும் பயன்படுத்தியிருப்பது பேசும் பொருளாக மாறியுள்ளது. அதுமட்டுமில்லாமல் அதிமுகவின் பொதுச்செயலாளர் சசிகலா என்று போடப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, பெங்களூரில் இருந்து சென்னை திரும்பிய போது காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்திருந்த நிலையில், அதிமுக அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் டிஜிபியிடம் புகார் அளித்திருந்தனர். மேலும் சசிகலா, தினகரனை ஒருபோதும் அதிமுகவில் இணைத்து கொள்ளமாட்டோம் என்றும் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் மீண்டும் பொதுச்செயலாளர் மற்றும் கொடியை பயன்படுத்தியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…
கோவை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சாட்டையடி…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…