பொதுச்செயலாளர் தான் ஒருவருக்கு பதவி நியமனம் செய்ய முடியும், பதவியில் இருந்து நீக்கமுடியும் என்று தினகரன் தெரிவித்துள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் பெங்களூரு – பரப்பன அக்ரஹாராத்தில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டு சிறைத்தண்டனை பெற்று வந்த சசிகலா கடந்த 27-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.இதற்கு இடையில் கடந்த ஜனவரி 20-ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் 11 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.இதன் பின் நீண்ட நாட்கள் தனிப்படுத்தப்பட்டிருந்தார்.பின்பு நேற்று பெங்களூருவில் இருந்து கிளம்பிய சசிகலா இன்று சென்னை வந்தடைந்தார்.
இந்நிலையில் இன்று அமமுக பொதுச்செயலாளர் தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில்,உறுப்பினர் அட்டை வழங்கும் அதிகாரமே பொதுச்செயலாளரிடம் தான் உள்ளது. புரட்சித்தலைவர் கண்ட அதிமுகவில் ஜெயலலிதா இருந்த வரையும் அதில் உள்ள சட்ட விதிகளில் பொதுச்செயலாளர் தான் எல்லா அதிகாரம் உடையவர். அவர் தான் பொதுக்குழுவை கூட்ட வேண்டும். பொதுச்செயலாளர் தான் ஒருவருக்கு பதவி நியமனம் செய்ய முடியும், பதவியில் இருந்து நீக்கமுடியும்.மேலும் பொதுச்செயலாளருக்கான சட்டப்போராட்டத்தை சசிகலா தொடர்வார் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் வசம் உள்ள காதி, கிராம…
பாகிஸ்தான் : கராச்சியில் நடைபெற்ற நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா இடையேயான முத்தரப்பு கிரிக்கெட் தொடரின்போது, ஐசிசி நடத்தை விதிகளின் நிலை…
சென்னை : இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் 'ரெட்ரோ' திரைப்படத்தின் முதல் பாடலான…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான விடாமுயற்சி படம் உலகம் முழுவதும் 300 கோடிகள்…
சென்னை : தமிழகத்தில் திமுக அரசு மீது மக்களுக்கு அதிருப்தியே கிடையாது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். சென்னையில்…
டெல்லி : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று புதிய வருமான வரி மசோதாவை தாக்கல் செய்தார். நாட்டின் வரி…