பொதுச்செயலாளரானார் ஈபிஎஸ்..! அதிமுக அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்ட 150 கிலோ லட்டு…!
அதிமுக அலுவலகத்திற்கு 150 கிலோ லட்டு கொண்டுவரப்பட்டது.
அதிமுக பொதுச்செயலாளர் பதவியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதால் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து, அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்திய பொள்ளாச்சி ஜெயராமன், நத்தம் விஸ்வநாதன் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி அவர்கள், அதிமுக தலைமை அலுவலகத்தில், மூத்த நிர்வாகிகள் முன்னிலையில் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார்.
இதனையடுத்து, அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடி வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், அதிமுக அலுவலகத்திற்கு 150 கிலோ லட்டு கொண்டுவரப்பட்டது.