ஏப்ரல் 1 முதல் காகிதமில்லா அலுவலகமாக மாறுகிறது தலைமைச் செயலகம்!
ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் சென்னை தலைமைச் செயலகம் காகிதமில்லா அலுவலகமாக மாறுகிறது என தகவல்.
தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் அனைத்து துறைகளிலும் காகிதங்களின் பயன்பாடு அதிக அளவு உள்ளது. இதற்காகவே ஒரு பெரும் தொகையை செலவிட வேண்டி உள்ளது. இதனை கருத்தில் கொண்டு இந்தச் செலவைக் குறைக்கும் வகையில் அனைத்து துறைகளிலும் காகிதப் பயன்பாட்டைக் குறைத்து கணினி மூலம் கடிதம், ஆவணங்களை அனுப்பும் இ-கவர்னன்ஸ் திட்டத்தை தமிழக அரசு கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.
இந்தத் திட்டத்தை அரசின் பல்வேறு துறைகள் செயல்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் சென்னை தலைமைச் செயலகம் காகிதமில்லா அலுவலகமாக மாறுகிறது என தகவல் வெளியாகியுள்ளது. அதாவது காகிதங்களை அகற்றி கணினி உள்ளிட்ட மின்னணு சாதனைகளை பயன்படுத்தபட உள்ளது.
இதனால் ஹென்னை தலைமை செயலகத்தில் முதற்கட்டமாக சில துறைகளையும் பின்னர் அனைத்து துறைகளும் மின்னணுமயமாக்கப்பட உள்ளன. இதற்காக போதுமான பயிற்சிகள் தலைமைச் செயலக ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்றும் தகவல் கூறப்படுகிறது.