நாளை நடைபெறவுள்ள பொதுத்தேர்வு – மாணவர்களுக்கு ஓபிஎஸ் வாழ்த்து..!
பொதுத்தேர்வு எழுத்தவுள்ள மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து ஓபிஎஸ் ட்வீட் செய்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா சூழல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு 10, 11 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முழுமையாக நடைபெறுகிறது. அதன்படி, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நாளை (மே 5-ஆம் தேதி) முதல் தொடங்குகிறது. 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6 ஆம் தேதியும்,பிளஸ் 1 மாணவர்களுக்கு மே 10 ஆம் தேதியும் தேர்வுகள் தொடங்கவுள்ளன.
இந்த நிலையில், பொதுத்தேர்வு எழுத்தவுள்ள மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து ஓபிஎஸ் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் எழுதவிருக்கும் மாணவ, மாணவியர் அனைவரும் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றிட எனது நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் எழுதவிருக்கும் மாணவ, மாணவியர் அனைவரும் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றிட எனது நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.
— O Panneerselvam (@OfficeOfOPS) May 4, 2022