10 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஜூன் மாதம் நடைபெற வாய்ப்பு.!
10 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வானது சட்டப்பேரவை தேர்தலுக்கு பின்னர் ஜூன் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
கொரோனா தொற்று பரவலை தடுக்க கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது . ஆனால் கடந்த சில மாதங்களாக தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், தளர்வுகளுடன் கூடிய நவம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்திருந்தது .
அதில் தமிழகத்தில் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள், 16-ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், பெற்றோர்கள், ஆசிரியர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு ,அதன் பின் பள்ளிகள் திறப்பது ஒத்தி வைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. மேலும் தற்போது தொடரும் ஆன்லைன் கல்வி முறை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது . மேலும் பொதுத்தேர்வு எழுத தயாராகும் மாணவர்களுக்கு தொடர்ந்து சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது .
இந்த நிலையில் தற்போது 10 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான பொது தேர்வு அட்டவணையை தேர்வுத்துறை தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளது . அதன்படி 10,11 மற்றும் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு ஜூன் மாதம் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏனெனில் தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே அதன் பின்னர் தான் 10 முதல் 12 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நடைபெறும் என்று கூறப்படுகிறது.