பொது தேர்வு இந்த ஆண்டே நடைபெறும் – அமைச்சர் செங்கோட்டையன்
5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொது தேர்வு இந்த ஆண்டே நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள அனைவருக்கும் கல்வி என்ற முறையில் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொது தேர்வு இந்த ஆண்டே நடைபெறும். 3 ஆண்டுகள் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பொது தேர்வு நடைபெறும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெறுவார்கள்.
ஆசிரியர்கள் கற்றல் திறன் மாணவர்கள் மேம்பட வாய்ப்பாக அமையும். ஏழை எளிய மாணவர்கள் எதிர்காலத்தில் போட்டி தேர்வை சந்திக்கும் வாய்ப்பாக இது அமையும். பொதுதேர்வுக்கான கேள்விதாள்கள் தயாரிக்கும் பணிகள் இனிமேல் துவக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.