பதவிகளை நீக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் உண்டு – பழனிசாமி தரப்பு
பொதுக்குழுவிக்கு கட்சியின் விதிகளை கட்டமைக்கவும், மேம்படுத்தவும் முழு அதிகாரம் உண்டு என எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதம்.
அதிமுக பொதுக்குழு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற வருகிறது. ஏற்கனவே ஓபிஎஸ் தரப்பு வாதங்கள் நிறைவடைந்து விட்ட நிலையில், தற்போது ஈபிஎஸ் தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. இபிஎஸ் தரப்பு வாதத்தில், அதிமுகவில் அனைத்து விவகாரங்களிலும் தொண்டர்களிடம் தான் செல்ல வேண்டும் என்பது சிரமமான காரியம்.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் பொதுக்குழு உறுப்பினர்களால் கொண்டு வரப்பட்டது. 2017ல் அதிமுக விதிமுறைகளில் மாற்றமும் பொதுக்குழு உறுப்பினர்களால் தான் கொண்டு வரப்பட்டது. எனவே, ஒருங்கிணைப்பாளர்கள் பதிவுகளை உருவாக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது எனில், நீக்குவதற்கும் அதிகாரம் உண்டு.
பொதுச்செயலாளர் பதவிக்கு மட்டும் தொண்டர்களிடம் செல்ல வேண்டும் என பன்னீர்செல்வம் ஏன் கூறுகிறார் எனவும் கேள்வி எழுப்பினர். அதிமுக அடிப்படை உறுப்பினர்களின் முகமாகத்தான் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள். இதனால் முடிவுகள் எடுப்பதில் பொதுக்குழுவிற்கே அதிகாரம் எனவும் வாதிட்டனர்.இரட்டை தலைமையில் ஆளுக்கொரு கருத்து இருக்கும், ஒரு முடிவு எடுக்க பல்வேறு தடுமாற்றங்கள் இருக்கும்.
அதிமுகவுக்கு இரட்டை தலைமை என்பது கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகளை உருவாக்கியபோது என்ன பின்பற்றப்பட்டதோ அதுவே தற்போது பின்பற்றப்பட்டது. மேலும், பொதுக்குழுவில் 94.5% உறுப்பினர்கள் ஆதரவு இருக்கிறது எனவும் உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பில் வாதம் வைக்கப்பட்டு வருகின்றன.