#BREAKING: நாளை பொதுக்குழு.. ஓபிஎஸ்ஸிடம் 23 தீர்மானங்கள் ஒப்படைப்பு!

Default Image

அதிமுக செயற்குழு – பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் ஓ.பன்னீர்செல்வத்தின் ஒப்புதலுக்காக ஒப்படைப்பு.

அதிமுக பொதுக்குழு, செயற்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள 23 தீர்மானங்கள் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக தகவல் கூறப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வத்தின் ஒப்புதலுக்காக 23 தீர்மானங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. தீர்மானக்குழு ஓபிஎஸ்ஸிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள தீர்மானத்தில் ஒற்றை தலைமை குறித்த தகவல் எதுவும் இடம்பெறவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், ஒப்புதலுக்காக அதிமுக ஒருங்கிணைப்பாளரிடம் தீர்மானங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், திட்டமிட்டபடி நாளை பொதுக்குழு, செயற்குழு கூடுவதாக தகவல் கூறப்படுகிறது. மேலும், ஒருங்கிணைப்பாளரும், பொருளாளருமான ஓபிஎஸ்ஸிடம் அதிமுக வரவு, செலவு கணக்கு விவரங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பொதுக்குழு கூட்டத்தில் வாசிப்பதற்காக அதிமுக வரவு, செலவு கணக்கு விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்