மக்களவை தேர்தலை முன்னிட்டு, இன்று பாமகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் கூடுகிறது. சென்னை எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலையில் உள்ள இராணி மெய்யம்மை அரங்கத்தில் இன்று காலை 11 மணிக்கு பொதுக்குழு கூட்டம் தொடங்குகிறது. பாமகவின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் முன்னிலையில் நடைபெறும் சிறப்பு பொதுக்குழு கூட்டத்திற்கு கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையேற்பார்.
மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவு எடுப்பதற்காக பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெறுகிறது. மேலும், இந்த பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், சென்னை எழும்பூரில் காலை 11 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் மக்களவை தேர்தலில் கூட்டணியா? அல்லது தனித்து போட்டியா? என்பது குறித்து முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளது.
இன்று முதல் மதுபானங்களின் விலை உயர்வு!
பொதுக்குழுவில் ஆலோசித்த பின்னரே கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் இதுவரை எந்த கட்சியுடனும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை எனவும் அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியான நிலையில் பாமக தரப்பில் விளக்கமளிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்து பாமக போட்டியிட்டது.
அதேபோல், 2021 சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக, பாஜக கூட்டணிலேயே பாமக இடம்பெற்றது. ஆனால், உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்ட பாமக, தற்போது நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிடுமா அல்லது கூட்டணியில் போட்டியிடுமா? என்பது குறித்து இன்று தெரியவரும். மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவு எடுப்பதற்கு இன்று பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது.
சென்னை : திருப்பரங்குன்றம் மலையில் முருகன் கோயில், காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது போல, மற்றோரு புறம் சிக்கந்தர் பாதுஷா…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என கைப்பற்றிய…
ஆஸ்திரேலியா : ஆஸ்திரேலிய அணியின் கேப்டனும் வேகப்பந்து வீச்சாளருமான பேட் கம்மின்ஸ் வருகின்ற பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கும்…
திருவண்ணாமலை : தமிழக வெற்றிக் கழக கட்சியை ஆரம்பித்து தற்போது 2ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார் அரசியல் கட்சி தலைவர்…
அமெரிக்கா : டெஸ்லா தலைவர் மஸ்க் தலைமையிலான அமெரிக்க அரசாங்கத் திறன் துறை (DOGE), தொழில்நுட்பம் மற்றும் ஆட்டோமேஷன் மூலம்…
பிரயாக்ராஜ் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத்தில் உள்ள பிரயாக்ராஜில் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் ஒன்று சேரும்…