#GCCBudget2023:தூய்மை வார்டுகளுக்கு வெகுமதி அறிவிப்பு -மேயர் பிரியா.!
சென்னை மாநகராட்சியின் 2023-24-ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது. சென்னை மாநகராட்சி மேயர் பிரியா இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது, சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்தார் .
அதில் “சுகாதாரத் துறையின் கீழ் நடத்தப்படும் மருத்துவ முகாம்களுக்கு அனைத்து கோட்டங்களுக்கும் கூடாரம், மேஜை மற்றும் நாற்காலி வாடகை முறையில் அமர்த்தி கொள்ள ரூ.45 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்து மண்டலம் வாரியாக தேவையின்படி பகிர்ந்து அளிக்கப்படும்.
பெருநகர சென்னை மாநகராட்சியில், மண்டலங்கள் 4, 5, 6, 7 மற்றும் 8 ஆகியவற்றில் பணிபுரியும் 10,002 எண்ணிக்கையிலான தூய்மை பணியாளர்களுக்கு, ஆண்டிற்கு இரண்டு எண்ணிக்கையிலான பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இரவில் ஒளிரும் புதிய வடிவமைப்புடன் கூடிய சீருடைகள் வழங்கப்படும். இதற்காக மாநகராட்சியின் வருவாய் நிதியிலிருந்து ரூ.3.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
கடற்கரையை சுத்தமாக பராமரிக்க ரூ.1.88 கோடி மதிப்பில் இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்படும் எனவும் குப்பையில்லாமல் தூய்மையாக பராமரிக்கும் வார்டுகளை தேர்ந்தெடுத்து வெகுமதிகள் வழங்கப்படும் என்று மாநகராட்சி பட்ஜெட்டில் மேயர் பிரியா ராஜன் அறிவிப்பு.
சுகாதாரத் துறையின் கீழ் பணிபுரியும் NULM தற்காலிக தொழிலாளர்களுக்கு நலப்பொருட்களும், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மழைக்கவச உடை (Raincoat) மற்றும் பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படும் இதற்காக ரூ.18.75 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.