கஜா புயல் பாதிப்பு:பட்டா இருந்தாலும், இல்லாவிட்டாலும் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும்…! துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்பு
கஜா புயல் பாதித்த பகுதிகளில் பட்டா இருந்தாலும், இல்லாவிட்டாலும் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை குறிப்பாக நாகப்பட்டினம் , தஞ்சாவூர்,புதுக்கோட்டை ,திருவாரூரை காலி செய்த கஜா புயலின் தாக்கத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மீண்டு வருகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் புதுக்கோட்டை ,நாகை , திருவாரூர் மற்றும் தஞ்சை ஆகிய மாவட்டங்களில் நிவாரண பணிகளையும் , நிவாரண உதவிகளையும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.அவர் வெளியிட்ட அறிவிப்பில், கஜா புயல் பாதித்த பகுதிகளில் பட்டா இருந்தாலும், இல்லாவிட்டாலும் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும். புயல் பாதித்த மக்கள் பட்டா வைத்திருந்தால் அவர்கள் தங்கியிருந்த இடத்திலேயே வீடுகள் கட்டித்தரப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.