கலைஞரின் நினைவாக பேனா சிலை.! ஜனநாயக குரலாக பேனா இருக்க வேண்டும்.! காயத்ரி ரகுராம் கருத்து.!

Default Image

மெரினாவில் அமைய உள்ள பேனா சிலை, வெறும் பேனா சிலையாக மட்டும் இல்லாமல், அனைவரும் வந்து பார்க்கக்கூடிய சுற்றுலா தலமாக இருக்க வேண்டும். – காயத்ரி ரகுராம் கருத்து. 

மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் நினைவாக சென்னை மெரினா கடற்கரையில் கடலுக்கு நடுவே பேனா நினைவு சின்னத்தை நிறுவ தமிழக அரசு முடிவு செய்து அதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனை பொருட்டு, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பாக நேற்று கருத்து கேட்பு கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஜன.31) கலைவாணர் அரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

இதில் பல்வேறு கட்சிகள், சமூக அமைப்புகள் கலந்துகொண்டு எதிர்ப்புகளையும், சிலர் ஆதரவுகளை கூறினர். இந்த பேனா சிலை குறித்து பாஜகவில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட காயத்ரி ரகுராம் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,  பேனா சிலை என்பது பொதுவானது, பேனா சிலையை மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. என குறிப்பிட்டு தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

 மேலும், இது வெறும் பேனா சிலையாக மட்டும் இருக்கக்கூடாது. அனைவரும் வந்து பார்க்கக்கூடிய சுற்றுலா தலமாக இருக்க வேண்டும்,  பார்வையாளர்கள் மகிழ்விக்கக்கூடிய லேசர் நிகழ்ச்சியுடன் தமிழ்நாட்டின் வரலாற்று சின்னம் பேனாவாக இருக்க வேண்டும். அது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும். பேனா என்பது பல விஷயங்களைக் குறிக்கும். அது ஒரு சிறந்த கருவி. இந்த பேனா சிலை ஒரு அரசியல் கட்சிக்கு சொந்தமாக இருக்கக்கூடாது. இது அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். எந்த புயல் வந்தாலும் சேதமடையாத வண்ணம் இந்த பேனா வலுவாக இருக்க வேண்டும். இந்த பேனா தமிழ்நாடு மக்களின் ஜனநாயகக் குரலாக இருக்க வேண்டும். எனவும் காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்