குடியுரிமை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து இந்த சட்டத்தில் மத ரீதியிலான பாகுபாடு காட்டப்பட்டுள்ளது என கூறி இந்தியா முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்த போராட்டமானது தமிழகத்திலும் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இந்நிலையில் குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறக்கோரி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாணவர்கள் , தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் சமூக வலைதளங்கள் மூலமாக ஒன்றாக இணைந்து அமைதி வழியில் வாயில் கருப்பு துணி கட்டி கொண்டு மத்திய மாநில அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களில்பெண் ஒருவர் ,ஒவ்வொரு இந்தியர்களும் தாங்கள் இந்தியர்கள் என்று ஆதாரங்களைக் காட்டவேண்டும் என கூறுவது எந்த வகையில் நியாயம். மேலும் ஒரு வெளி நாட்டைச் சேர்ந்தவருக்கு ஆதாரங்கள் இல்லை என்றாலும் அவர்களுக்கு ஆதாரங்களை எடுத்துக் கொடுத்து அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குகின்றன.
ஆனால் இந்தியாவிலேயே இருக்கும் இந்தியர்கள் மட்டும் ஏன் ஆதாரங்களைக் காட்டவேண்டும் என கூறுகிறார்கள். சிலருடைய ஆதாரங்கள் வெள்ளத்திலும் ,வீடு வீடாக மாறி செல்லும்போதும் காணாமல் போகிறது .அப்படியிருக்கையில் எப்படி அவர்கள் ஆதாரங்களை நிரூபிக்க முடியும் என கூறினார்.
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…