கொடுத்தார்கள்..அதனால் மீண்டும் வென்றார்கள்- ராமதாஸ் ட்விட் !
சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக ஒட்டுமொத்த வன்னியர்களின் களப்பணி அமைய வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த பல ஆண்டுகளாக வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து பாமக போராட்டம் நடத்தி வருகிறது. இதைதொடர்ந்து, கடந்த சில மாதங்களாக இந்த போராட்டத்தினை பாமக தீவிரமாக கையில் எடுத்தது. ஒதுக்கீட்டு குறித்து அரசு அறிவித்தால்தான் கூட்டணி என பாமக தெரிவித்தது.
இந்நிலையில், நேற்று சட்டசபையில் கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத ஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது.
கொடுத்தார்கள்… அதனால் மீண்டும் வென்றார்கள்!
வன்னியர்களுக்கு இடப்பங்கீடு கொடுத்தார்கள்… அதனால் மீண்டும் ஆட்சிக்கு வந்தார்கள் என்று சொல்லும் வகையில் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக ஒட்டுமொத்த வன்னியர்களின் களப்பணி அமைய வேண்டும்!#TNElections2021
— Dr S RAMADOSS (@drramadoss) February 27, 2021
இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், வன்னியர்களுக்கு இடப்பங்கீடு கொடுத்தார்கள். அதனால் மீண்டும் ஆட்சிக்கு வந்தார்கள் என்று சொல்லும் வகையில் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக ஒட்டுமொத்த வன்னியர்களின் களப்பணி அமைய வேண்டும் என பதிவிட்டுள்ளார்.