தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் மகனும், கள்ளக்குறிச்சி எம்பியுமான கவுதம சிகாமணி மீதான வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது. அதாவது, அமைச்சர் பொன்முடியின் மகனும், எம்பியுமான கவுதம சிகாமணிக்கு எதிரான சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கு சென்னை எம்பி – எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.
இதையடுத்து 2வது சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட இந்த வழக்கின் விசாரணை செப். 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. செம்மண் குவாரி முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை கடந்த மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில், 2006-2011 திமுக ஆட்சியில் அதிகளவு செம்மண் எடுத்த புகார் தொடர்பான வழக்கு வேறு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வருகிறது. இன்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. இதனால், மீண்டும்…
நியூ யார்க் : அமெரிககாவை சேர்ந்த நிதிசார்பு ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனம் இந்திய வர்த்தகர்கள் மத்தியில் மிக பிரபலமான…
ஸ்ரீஹரிகோட்டா : விண்ணில் 2 செயற்கைகோள்களை இணைத்து அதன் மூலம் 2 செயற்கைகோள்களுக்கு இடையே எரிபொருள் அல்லது வேறு பொருட்கள்…
ராஜ்கோட்: மகளிருக்கான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்தை 304 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி தொடரை…
மும்பை: பாலிவுட் நடிகர் சயிப் அலிகானை வீடு புகுந்து மர்ம நபர் கத்தியால் குத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பாந்த்ராவில்…
மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும்…