நாட்டில் தற்பொழுது பெட்ரோல் விலை மிக அதிக அளவில் உயர்ந்து கொண்டே செல்கிறது. நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பொது மக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தி உள்ளதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பொதுமக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தி உள்ளதாகவும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால் இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகரித்து வருவதாக மத்திய அரசு கூறுவதை தற்போதுள்ள சூழ்நிலையில் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் டெல்லி, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 100 ரூபாயை கடந்துவிட்ட நிலையில், தமிழகத்திலும் 100 ரூபாயை கடந்து விடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர், அவ்வாறு 100 ரூபாய்க்கு பெட்ரோல் விலை உயர்ந்தால் காய்கறி, அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் வாகனங்களின் வாடகைக் கட்டமுணம் மேலும் உயரக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, கொரோனா பாதிப்பால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரக்கூடிய இந்த நிலையில், பெட்ரோல் விலையை உயர்த்துவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது எனவும், பொதுமக்களின் நலன் கருதி பெட்ரோல் விலையை குறைக்க மத்திய மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…