திருத்தணி முருகன் கோயில் பிரசாத தயாரிப்பு கூடத்தில் கேஸ் கசிவு..!
திருத்தணி முருகன் கோயில் பிரசாத தயாரிப்பு கூடத்தில் திடீரென்று சமையல் எரிவாயு சிலிண்டரில் கசிவு
திருத்தணி முருகன் கோயில் பிரசாத தயாரிப்பு கூடத்தில் திடீரென்று சமையல் எரிவாயு சிலிண்டரில் கசிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பதறிய கோவில் ஊழியர்கள் பிரசாத கூடத்தில் இருந்து உடனடியாக வெளியேறினர்.
இதனை அடுத்து இந்த சம்பவம் தொடர்பாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. புகாரின் பெயரில் சிலிண்டரிலிருந்து தொடர்ந்து கேஸ் கசிவு ஏற்பட்ட நிலையில், விபத்தை தவிர்க்க நடவடிக்கை மேற்கொண்டனர்.