பிரதமர் வாயால் அறிவிக்கப்படாத ‘பரிசாக’ கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு – மு.க.ஸ்டாலின்

இந்திய மக்களுக்கு, பிரதமரும் அவரது அமைச்சரவையும் தருகின்ற கொடுமையான பரிசுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.ஒரு புறம் பெட்ரோல் ,டீசல் விலை தொடர்ந்து வந்தாலும் மறுபுறம் கேஸ் சிலிண்டரின் விலை ரூ.50 அதிகரித்து உள்ளது.சென்னையில் ஒரு சிலிண்டரின் விலை 785 ரூபாயாக அதிகரித்துள்ளது.நாடு முழுவதும் கேஸ் சிலிண்டர் விலை 50 ரூபாய் அதிகரித்துள்ளது.இதனால் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்திற்கு வருகை தந்த பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள், சட்டப் பேரவை தேர்தலைக் கருத்தில் வைத்து, பல அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார். மதுரை “எய்மஸ்” மருத்துவமனையின் நிலை என்னவென்று அறிந்த தமிழக மக்கள், பிரதமரின் புதிய அறிவிப்புகளின் தன்மையையும் தரத்தையும் நன்கு அறிவார்கள். அவர் வாயால் அறிவிக்கப்படாத ‘பரிசாக’ கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்த்தப்பட்டிருக்கிறது.
பெட்ரோல் விலை ‘செஞ்சுரி’ அடிக்கப்போகிறது. டீசல் விலை அதனைப் பின் தொடர்கிறது. சமையல் கேஸ் விலை விண்ணைத் தொடுகிறது. இந்திய மக்களுக்கு, பிரதமரும் அவரது அமைச்சரவையும் தருகின்ற கொடுமையான பரிசுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. மக்களுக்கு இத்தகைய பரிசுகள் தேவையில்லை. அவர்கள் நிம்மதியாக வாழும் வகையில், வரிவிதிப்புகளைக் குறைத்து, விலையேற்றத்தைக் கைவிட வலியுறுத்துகிறேன்.இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
“பெட்ரோல் – டீசலை தொடர்ந்து சமையல் கேஸ் விலையையும் கடுமையாக உயர்த்தியிருப்பது – மோடி அரசு மக்களுக்குத் தந்துள்ள கொடூர பரிசு”
– கழக தலைவர் @mkstalin அவர்கள் அறிக்கை.
Link: https://t.co/aQnYr9FRvC#LPGPriceHike pic.twitter.com/ceQrAkKlW0
— DMK (@arivalayam) February 15, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சட்டப்பேரவையின் இறுதி நாள் முதல்.., ‘பத்மபூஷன்’ அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள் வரை.!
April 29, 2025
“அந்த பையனுக்கு பயம் இல்ல” கிரிக்கெட் உலகத்தை திரும்பி பார்க்க வைத்த வைபவ்.! மொட்டை மாடி பயிற்சி வீடியோ.!
April 29, 2025
வைரல் வீடியோ: பஹல்காம் தாக்குதலுக்கு ஜிப்லைன் ஆப்ரேட்டர் காரணமா? சுற்றுலா பயணி அளித்த ஆதாரம்.!
April 29, 2025
தீவிரவாத தாக்குதல்…, நடிகர் அஜித் கேட்டு கொண்டது இதைத்தான்!
April 29, 2025
குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!
April 28, 2025