ஜனவரி 1 முதல் குப்பைக்கு கட்டணம் – சென்னை மாநகராட்சி!

வருகின்ற 2021 ஆம் ஆண்டு 1 ஆம் தேதி முதல் சென்னை மாநகராட்சியிலுள்ள மக்கள் குப்பை கொட்டுவதற்கு ரூபாய் 100 கட்டணமாக வஸோலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 1-ஆம் தேதி முதல் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் குப்பை கொட்டுவதற்கு கட்டணம் வசூலிக்கலாம் என திடக்கழிவு மேலாண்மை விதிகளுக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில், சென்னை மாநகராட்சி இது குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் குப்பைகளை கொட்டுவதற்கு வீடுகளுக்கு 10 ரூபாய் முதல் 100 ரூபாய் வரையிலும் வசூலிக்கலாம் எனவும், வணிக இடங்களுக்கு 1000 முதல் 7500 வரை கட்டணமாக வசூலிக்கவும், உணவு விடுதிகளில் 300 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரையிலும், திரையரங்குகளில் 750 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரையிலும் கட்டணம் வசூலிக்கலாம் என அறிவித்துள்ளது.
மேலும் பொது இடங்களில் நிகழ்ச்சி நடத்துபவர்கள் ஐந்தாயிரம் ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரையிலும் மருத்துவமனைகள் 2000 ரூபாய் முதல் நான்காயிரம் ரூபாய் வரையிலும் கட்டணம் செலுத்தலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. மேலும் விதிகளை மீறி குப்பைகளை கொட்டு பவர்களு க்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் பொது இடங்களில் குப்பை கொட்டினால் 500 ரூபாய் வரையிலும், கட்டட கழிவுகளை 5,000 ரூபாய் வரையிலும் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது. தரம் பிரித்து குப்பைகளை கொடுக்கத் தவறும் பட்சத்தில் 5000 ரூபாய் வரையிலும் குப்பைகளை எரிப்பவர்களுக்கு 2,000 ரூபாயும் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
மருத்துவ சிகிச்சையில் அஜித்! காரணம் என்ன?
April 30, 2025
”234-ல் வென்றாலும் ஆச்சரியமில்ல.., எதிர்கட்சியினரை ஒரு கை பார்ப்போம்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!
April 30, 2025
சினிமாவுக்குள் சினிமா.., காமெடி, திரில்லர்., கலந்து கட்டி அடிக்கும் DD Next Level டிரெய்லர் இதோ…
April 30, 2025
“சென்னை சாலைக்கு விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும்!” தேமுதிக கூட்டத்தில் முக்கிய தீர்மானம்.!
April 30, 2025
தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகர் நியமனம்.!
April 30, 2025