தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைத்து வருகிறது. தமிழகத்தில் கஞ்சா நடமாட்டம் அதிகமாக இருப்பது தான் இதற்கு காரணம் என இபிஎஸ் குற்றம் சாட்டினார்.
இன்று தமிழக சட்டப்பேரவை முடிந்து வெளியே வந்த எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார் . அதில், அதிமுக ஆட்சியில், 2011-2012 முதல் 2020 – 2021 வரையில் 1,704 திட்டங்கள் அறிவிக்கப்பட்டு , அதில் 1167 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டவை என நிதித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மீதம் உள்ள திட்டங்களில் 491 பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் , 20 பணிகளுக்கு அரசாணை வெளியிட வேண்டும் எனவும், 26 திட்டங்கள் கைவிடப்பட்டவை என்றும், அப்படி பார்த்தல், அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்கங்களில் 68 சதவீத பணிகள் நிறைவேற்றப்பட்டுவிட்டன. என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார் .
காலை உணவு திட்டம் :
ஆனால், அதிமுக ஆட்சியில் 27 சதவீத பணிகள் மற்றும் நிறைவேற்றப்பட்டன என்றும் , எந்த பணியும் நடைபெறவில்லை என்றும், தமிழக அரசு குற்றம்சாட்டி வருகின்றன. என கூறினார் . மேலும், அக்சயபாத்திரம் திட்டம் மூலமாக 35 ஆயிரம் அரசு பள்ளி குழந்தைகளைக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டது. அதிமுக தான் காலை உணவு திட்டத்திற்கு முன்னோடி திட்டமாக இந்த திட்டத்தை கொண்டு வந்தோம் என இபிஎஸ் குற்றம் சாட்டினார்.
கஞ்சா போதையில் கொலை :
மேலும், தமிழகத்தில், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. அதிமுங்க பிரமுகர் பெரம்பூரை சேர்ந்த இளங்கோ வெட்டி கொலை செய்யப்பட்டார். அவர்கள் அனைவரும் கஞ்சா போதையில் இருந்துள்ளனர். 5 பேர் போதையில் தான் இந்த கொலை சம்பவத்தை நிகழ்த்தியுள்ளனர் என்றும் இபிஎஸ் குற்றம் சாட்டினார்.
விழுப்புரத்தில் கொலை :
அதேபோல, விழுப்புரத்தில் நேற்று, திமுக கட்சியை சேர்ந்த 2 பேர் முகமது ராஜா என்பவரை கொலை செய்துள்ளனர். அவர்களும் போதையில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தற்போது கஞ்சா தாராளமாக கிடைக்கிறது. கஞ்சா முழுமையாக தடை செய்யப்பட்டு இருந்தால் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுத்து இருக்கலாம் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சென்னை : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த…
சென்னை : மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.…
சென்னை : விஜயின் கடைசி திரைப்படத்தினை இயக்குநர் எச்.வினோத் இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு அரசியல்…
சென்னை : புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பயன்பாட்டில் இருந்த குடிநீர் தேக்க தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரம் பெரும்…
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய விஷயங்கள் இன்னும் சர்ச்சையில் உள்ளது. தொடர்ச்சியாக…