கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்டதில் 13 பேர் மீது குண்டர் சட்டம் பதியப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் 13ஆம் தேதி, கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியமூரியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்ததை அடுத்து இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அப்பகுதியில் போராட்டம் நடைபெற்றது.
அதனை அடுத்து ஜூலை 17ஆம் தேதியில் போராட்டம் கலவரமாக மாறியது. இதில் தனியார் பள்ளி சூறையாடப்பட்டது. இந்த கலவரம் தொடர்பாக சுமார் 410 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில் பெரும்பாலானோர் ஜமீனில் வெளியே வந்தனர். குறிப்பிட்ட சிலர் மீது இன்னும் வழக்கு நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கனவே 12 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்த நிலையில் தற்போது புதியதாக ஒருவர் மீதும் குண்டர் சட்டம் போடும் படி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, தற்போது கள்ளக்குறிச்சி கனியமூர் பள்ளி கலவரத்தில் ஈடுப்பட்டதில் 13 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…
கோவை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சாட்டையடி…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…