திருப்பூரில் சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை! 9 பேர் கைது!
Tiruppur : திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டை அருகே 17 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் 9 பேர் போக்சோ வழக்கில் கைது.
திருப்பூர் மாவட்டத்தில் 17 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் 9 பேர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அந்த சிறுமி கருவுற்று 4 மாதங்கள் கடந்த பிறகே உறவினர்களுக்கு தெரிய வந்த நிலையில் காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.
இதனையடுத்து, அதன் அடிப்படையில், உடுமலைப்பேட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு 9 பேரை போக்சோ வழக்கில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 6 பேர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், 3 சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையும் நடைபெற்று வருகிறது.