திருடி விட்டதாக கூறி இளைஞரின் கண்ணை கட்டி வைத்து காட்டில் பிரம்பால் அடித்து தாக்கிய கும்பல் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் பாபநாசம் தாலுக்கா பூண்டி மேல தெருவில் வசித்து வரக்கூடிய குணசேகரன் என்பவனின் மகன் தான் ராகுல். கூலித்தொழில் செய்து வரக்கூடிய ராகுல் திருடி விட்டதாக கூறி அந்த ஊரில் இருக்ககூடிய சில இளைஞர்கள் சேர்ந்து ராகுலின் கண்ணை கட்டி வைத்து அருகே உள்ள காட்டிற்கு அழைத்துச் சென்று மரத்தில் பிடித்து வைத்துக்கொண்டு பிரம்பால் பின்புறம் சரமாரியாக தாக்கினர். வலி பொறக்க முடியாமல் ஒரு கட்டத்தில் ராகுல் மயங்கி விழ, அப்போதும் விடாமல் ராகுலை அந்த கும்பல் பிரம்பால் மிகவும் தாக்கியது. மீண்டும் விழித்துக் கொண்டு அண்ணா விட்டுடுங்க வேண்டாம் என ராகுல் கெஞ்சினாலும், சற்றும் மனம் இரங்காத மனிதாபிமானமற்ற இந்த இளைஞர்கள் மீண்டும் மீண்டும் ராகுலை தாக்கிக் கொண்டே இருந்தனர்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியதையடுத்து, இந்த சமன்பதிற்கு கண்டனங்கள் குவிந்தது. தான் செய்யாத குற்றத்திற்காக தாக்கப்பட்டதாக கூறி ராகுல் விஷம் அருந்தியுள்ளார். இதனை அடுத்து அருகில் உள்ள தஞ்சை அரசு மருத்துவமனையில் ராகுல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், தாக்குதல் நடத்திய இளைஞர்கள் ராஜதுரை, பார்த்திபன், சரத், விக்கி ஆகிய 4 பேர் தான் என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து காவல்துறையினர் அவர்களை கைது செய்துள்ளதுடன், மேலும் இருவரையும் தேடி வருகின்றனர். மேலும் இவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…