சிவில் சர்வீசஸ் தேர்வு.. தமிழகத்தில் கணேஷ்குமார் பாஸ்கர் முதலிடம்.!

யூ.பி.எஸ்.சி மத்திய அரசின் பல்வேறு உயர் அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தி பணி நியமனம் செய்து வருகிறது.இந்நிலையில், கடந்த ஆண்டு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட 829 பணியிடங்களுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வு நடத்தப்பட்டது.
தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் நேர்காணல் நடைபெற்றது. இதன் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இந்த சிவில் சர்வீசஸ் தேர்வில் தமிழகத்தை சார்ந்த கணேஷ்குமார் பாஸ்கர் என்பவர் இந்திய அளவில் 7-வது இடத்தையும், தமிழகத்தில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
கணேஷ்குமார் பாஸ்கர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலை சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. www.upsc.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
AFG vs ENG: கடைசி வரை போராடிய இங்கிலாந்து… கடைசியில் திரில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான்
February 26, 2025
ஈஷாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா! காலை 6 மணி வரை தியானம்!
February 26, 2025
மத கஜ ராஜா வசூலை மொத்தமாக எரித்த டிராகன்! 5 நாட்களில் இவ்வளவு வசூலா?
February 26, 2025