சட்டப்பேரவை முன்பு விநாயகர் சிலையுடன் போராட்டம் ….!

Published by
Rebekal

விநாயகர் சதூர்த்தி அன்று விநாயகர் சிலை வைத்து வழிபட அனுமதி மறுக்கப்பட்டதற்கு, விநாயகர் சிலையுடன் சிலை தயாரிப்பாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் செப்டம்பர் 15-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பான அறிவிப்பு நேற்று வெளியாகிய நிலையில் வருகிற விநாயகர் சதுர்த்தி தினத்தன்று பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதி கிடையாது என்ற அறிவிப்பும் வெளியாகியது.

மேலும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கும், நீர்நிலைகளில்  விநாயகர் சிலைகளை கரைப்பதற்கும் அனுமதி இல்லை எனவும், வீட்டிலிருந்தபடியே பொதுமக்கள் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. தற்பொழுது விநாயகர் சிலை தயாரிப்பு சங்கத்தினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று சட்டப்பேரவைக்கு முன்பதாக கூடி விநாயகர் சிலையுடன் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும், அவர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டுள்ளனர். இவர்கள், தமிழக அரசு விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட அனுமதி வழங்க வேண்டும் எனவும், ஏற்கனவே கடந்த வருடம் வருமானமின்றி பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வருடமும் இவ்வாறு இருந்தால் என்ன செய்வது எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Recent Posts

நீட் விலக்கு : “திமுக அரசு ஏன் உச்சநீதிமன்றம் போகல?”அண்ணாமலை சரமாரி கேள்வி!

நீட் விலக்கு : “திமுக அரசு ஏன் உச்சநீதிமன்றம் போகல?”அண்ணாமலை சரமாரி கேள்வி!

சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…

1 hour ago

நான் ஏன் ஜெயலலிதாவை எதிர்த்தேன்? ரஜினிகாந்த் பரபரப்பு விளக்கம்!

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…

2 hours ago

EMI செலுத்துவோர் கவனத்திற்கு.., ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்த RBI! எவ்வளவு தெரியுமா?

டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…

3 hours ago

குமரி அனந்தன் உடலுக்கு அரசு மரியாதை! முதலமைச்சர் அறிவிப்பு!

சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…

4 hours ago

காலம் கடந்துவிட்டது., சீன பொருட்கள் மீது 104% வரி! டிரம்ப் கடும் நடவடிக்கை!

வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு  மற்ற…

4 hours ago

சென்னையை துரத்தும் துரதிருஷ்டம்.! 180+ சேஸிங்கில் தொடர்ந்து கோட்டை விடும் சிஎஸ்கே.!

பஞ்சாப் : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வியடைந்தது, 18…

5 hours ago