சட்டப்பேரவை முன்பு விநாயகர் சிலையுடன் போராட்டம் ….!
விநாயகர் சதூர்த்தி அன்று விநாயகர் சிலை வைத்து வழிபட அனுமதி மறுக்கப்பட்டதற்கு, விநாயகர் சிலையுடன் சிலை தயாரிப்பாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் செப்டம்பர் 15-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பான அறிவிப்பு நேற்று வெளியாகிய நிலையில் வருகிற விநாயகர் சதுர்த்தி தினத்தன்று பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதி கிடையாது என்ற அறிவிப்பும் வெளியாகியது.
மேலும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கும், நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கும் அனுமதி இல்லை எனவும், வீட்டிலிருந்தபடியே பொதுமக்கள் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. தற்பொழுது விநாயகர் சிலை தயாரிப்பு சங்கத்தினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று சட்டப்பேரவைக்கு முன்பதாக கூடி விநாயகர் சிலையுடன் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேலும், அவர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டுள்ளனர். இவர்கள், தமிழக அரசு விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட அனுமதி வழங்க வேண்டும் எனவும், ஏற்கனவே கடந்த வருடம் வருமானமின்றி பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வருடமும் இவ்வாறு இருந்தால் என்ன செய்வது எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.