கிறிஸ்தவ தேவாலயத்தின் அருகே வைக்கப்பட்ட விநாயகர் சிலை…! 30 பேர் கைது…!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு மலைசுற்றுப்பாதையில் உள்ள தேவாலயம் அருகே இந்து அமைப்பினர் விநாயகர் சிலை வைத்த இந்து அமைப்பினர்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு மலைசுற்றுப்பாதையில் தேவாலயம் ஒன்று உள்ளது. இந்நிலையில், திடீரென இந்து அமைப்பினர் பிள்ளையார் சிலை ஒன்றை வைத்து வழிபட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, தேவாலயத்தை சேர்த்தவர்கள், சிலையை அகற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேசமயம், விநாயகர் சிலையை அகற்ற கூடாது என இந்து அமைப்பினர் தெரிவித்தனர். அப்போது பெண் ஒரு வர சாமியாடியபடி, ‘யாரு வந்தாலும் என்னை அசைக்க முடியாது’ என சிலையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்பட்டதை தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், இருதரப்பினரிடையே கோட்டாட்சியர் இளவரசி நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து, தள்ளு முள்ளுக்கு மத்தியில் விநாயகர் சிலை அகற்றப்பட்டது. மேலும், இது தொடர்பாக போலீசார் 30 பேரை கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
“மிரட்டலுக்கு பயப்படவே மாட்டோம்”..பதிலடி கொடுத்த ஹமாஸ்! மீண்டும் எச்சரித்த இஸ்ரேல் !
February 12, 2025![israel](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/israel.webp)
LIVE : தமிழக அரசியல் நிகழ்வுகள் முதல்…சாம்பியன்ஸ் ட்ராஃபி அப்டேட் வரை!
February 12, 2025![live today news](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/live-today-news.webp)