பாஜக சார்பில் நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் – எல் முருகன்

தமிழக பாஜக சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்படும் என்று பாஜக மாநில தலைவர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.
நாளை கொண்டாடவுள்ள விநாயகர் சதுர்த்திக்கு பொது இடங்களில் சிலை வைக்கவும், ஊர்வலம் செல்லவோ மற்றும் சிலையை கரைக்கவும் தமிழக அரசு தடை விதித்தது. இதனை சில அரசியல் காட்சிகள் எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுத்தனர். பின்னர் விநாயகர் சதுர்த்திக்காக தளர்வுகள் அளிக்க இயலாது என தமிழக அரசு கூறியதை ஏற்று உயர்நீதிமன்றம், வீடுகளில் தனிநபர் வைத்துள்ள விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க அனுமதி வழங்கியது
சென்னையில் மெரினா கடற்கரையை தவிர்த்து பிற நீர்நிலைகளில் தனிநபர் வைத்துள்ள விநாயகர் சிலைகளை கரைக்கலாம் என்றும் சதுர்த்திக்காக பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கவோ, ஊர்வலம் செல்லவோ கூடாது எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு, பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட, ஊர்வலம் நடத்த அனுமதி கோரிய வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழக பாஜக சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்படும் என்று பாஜக மாநில தலைவர் எல் முருகன் தெரிவித்துள்ளார். அரசின் வழிகாட்டுதலின்படி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படும் என்றும் விநாயகர் சதுர்த்தி விவகாரத்தில் இந்து முன்னணியின் நிலைப்பாடுதான் பாஜகவின் நிலைப்பாடும் என்று குறிப்பிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!
February 28, 2025
“விருப்பமில்லாமல் செய்தால் தான் அது பாலியல் வன்கொடுமை” சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு!
February 28, 2025
AFG vs AUS : அரையிறுதிக்கு செல்லப்போவது யார்? டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு.!
February 28, 2025