விநாயகர் சதுர்த்திக்காக பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க கூடாது என்ற தமிழக அரசின் ஆணையை ரத்து செய்ய முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளார்.
நாளை மறுநாள் விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யவும், ஊர்வலம் நடத்தவும், நீர் நிலைகளில் சிலைகளை கரைக்கவும் தமிழக அரசால் தடை விதிக்கப்பட்டது.
இதனிடையே உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல வழக்கு ஓன்று தொடரப்பட்டது. தூத்துக்குடியை சேர்ந்த ராமசாமி என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில் ,விநாயகர் சிலையை நிறுவி வழிபட அனுமதி வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், விநாயகர் சதுர்த்திக்காக பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க கூடாது என்ற தமிழக அரசின் ஆணையை ரத்து செய்ய முடியாது .மேலும் விநாயகர் சிலை வைப்பது தொடர்பான அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிடாது என்று கருத்து தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தது.
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து 4 வயது சிறுமி பலியான சம்பவம்…
மதுரை: அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சார்பில், மதுரையில் பேரணி நடத்தப்பட்டது. இதில்…
சென்னை: தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் கடந்த 40 மாதங்களில் 1666 புதிய நியாய விலைக் கடைகள் திறக்கப்பட்டுள்ளது. 2,778 நியாய…
அமெரிக்கா: ஹே சிரி... இதை செய், ஹே சிரி... அதை செய்... என சொல்லலும் ஆப்பிள் சொந்தகாரர்கள் அந்த சாதனத்தில்…
கோவை: கேரளா மாநிலம் கொச்சியில் இருந்து கோவை நோக்கி வந்த 18 டன் எடை கொண்ட எல்பிஜி டேங்கர் லாரி…
சென்னை :ஜவ்வரிசி வைத்து பஞ்சு போல ரசகுல்லா செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்:…