விநாயகர் சதுர்த்தி-தனிமனித இடைவெளியை பயன்படுத்தி தரிசனம்.!
இன்று தமிழகம் முழுவதும் உற்சாகமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்த வருடம் விநாயகர் சிலைகளை பொது இடத்தில் வைத்து வழிபாடு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால், மக்கள் வீடுகளில் இருந்தே விநாயகர் சதுர்த்தியை கொண்டாட அரசு வலியுறுத்தி உள்ளது.
இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரி பல இடங்களில்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை பொதுமக்கள் வீடுகளிலேயே எளிமையாக கொண்டாடி வருகின்றனர்.
இன்று சிறிய கோவில்கள் திறக்கப்பட்டுள்ளதால் அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. மேலும், பக்தர்கள், தனிமனித இடைவெளியை பயன்படுத்தி தரிசனம் செய்து வருகின்றனர்.