காந்தி பிறந்தநாள் : சென்னை மெரினாவில் உள்ள காந்தியின் சிலைக்கு முதல்வர் மலர் தூவி அஞ்சலி …!
இன்று மகாத்மா காந்தி பிறந்தநாள் அனுசரிக்கப்படும் நிலையில், சென்னை மெரினாவில் உள்ள காந்தியின் சிலைக்கு முதல்வர் மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.
இன்று தேசத்தந்தை காந்தியடிகளின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், காந்தியடிகளின் நினைவிடத்திற்கு சென்று பல்வேறு அரசியல் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் சென்னை மெரினாவில் உள்ள காந்தி சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அவரது உருவப்படமும் வைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் இன்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் காந்தியின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார், மேலும் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அதில், அகிம்சை – சகோதரத்துவம் என மானுட சமுதாயத்திற்கு இன்றியமையாத பண்புகளை வாழ்வின் நெறியாகக் கொண்டு வாழ்ந்து நமக்குக் கற்பித்த மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாள். தேசத் தந்தை காட்டிய நல்வழியில் நாமும் நாடும் நடைபோடுவதே இன்றைக்கும் என்றைக்கும் தேவையாகும். சகோதரத்துவத்தை வளர்ப்போம் என பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
அகிம்சை – சகோதரத்துவம் என மானுட சமுதாயத்திற்கு இன்றியமையாத பண்புகளை வாழ்வின் நெறியாகக் கொண்டு வாழ்ந்து நமக்குக் கற்பித்த மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாள்!
தேசத் தந்தை காட்டிய நல்வழியில் நாமும் நாடும் நடைபோடுவதே இன்றைக்கும் என்றைக்கும் தேவையாகும்!
சகோதரத்துவத்தை வளர்ப்போம்! pic.twitter.com/ggGzeazSpg
— M.K.Stalin (@mkstalin) October 2, 2021