காந்தியின் நினைவு தினம் – திமுக அலுவலகத்தில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு.!

udhayanidhi stalin

திமுக தலைமை அலுவலகத்தில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. முன்னதாக,மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி அனைத்து மத தலைவர்கள் பங்கேற்று மத நல்லிணக்க உறுதிமொழியை எடுக்க வேண்டும் என உத்தரவித்திருந்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதநல்லிணக்கத்தின் அடையாளமான அண்ணல் காந்தியடிகள் அவர்கள் மதவெறியர்களால் கொல்லப்பட்ட ஜனவரி 30-ஆம் நாளை, நாடு முழுவதும் மதநல்லிணக்க நாளாகக் கடைப்பிடிக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும். மதச்சார்பற்ற ஜனநாயகச் சக்திகள் இதில் கவனம் செலுத்தியாக வேண்டும். அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டுக்கு இந்தக் கடமை அதிகம் இருக்கிறது.

நாடு சந்தித்து வரும் மதவெறி பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராகவும், நாட்டு மக்கள் அனைவரும் மத வேறுபாடின்றி ஒற்றுமையாக வாழ்ந்திட வேண்டும் என்பதையும் வலியுறுத்தும் வகையிலும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை ஜனவரி 30 அன்று மாவட்டக் கழகங்கள் நடத்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அதன்படி, காந்தியின் நினைவு நாளான இன்று தமிழகம் முழுவதுமே திமுக சார்பில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், சென்னை திமுகவின் தலைமை அலுவலகத்தில் திமுக சார்பில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் அமைச்சர்கள் உதயநிதி, கே.என்.நேரு. எ.வ.வேலு,  தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், மற்றும் திமுக நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டுனர். இதில், மக்கள் அனைவரும் மத வேறுபாடு இன்றி ஒற்றுமையாக வாழ்ந்திட வலியுறுத்தி உறுதிமொழி ஏர்க்கப்பட்டது

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்