இன்று நாடு முழுவதும் மகாத்மா காந்தியின் 151-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இவரது பிறந்தநாளையடுத்து பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள தொட்டப்பநாயக்கணூரைச் சேர்ந்த குருசாமி (89) எனும் சுதந்திர போராட்ட வீரர் இன்று காலமானார்.
இவர் உடல்நலக் குறைவு காரணமாக இரவு 12:30 மணியளவில் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். 1942 ஆம் ஆண்டு நடைபெற்ற சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்ற நிலையில், காந்தி மீது கொண்ட பற்றால் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டவர். அதனால் மக்கள் அவரை ‘காந்தி தாத்தா’ என்றே அன்போடு அழைத்து வந்தனர். இந்த கிராமத்து காந்தி தாத்தா, பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இடையே தேசப்பற்றை விதைக்க பாடுபட்டவர்.
இந்நிலையில், இவரது மறைவு கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : தவெகவின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டங்கள் இன்று சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடக்கின்றன.…
சென்னை : தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 7ம் தேதி சென்னை கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என…
லேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அறிவித்து, இந்த ஆண்டு பிப்ரவரி 2-ஆம் தேதியோடு ஓராண்டு நிறைவுறுகிறது. இந்நிலையில், 2ஆம்…
புனே : இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிவிட்டது. நேற்று மகாராஷ்டிரா மாநிலம் புனே கிரிக்கெட்…
சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்திற்கு…