Tiruchendur Murugan Temple [File Image]
இந்து கடவுள் முருகப்பெருமான் , சூரனை வதம் செய்த சூரசம்ஹார நிகழ்வு வரும் நவம்பர் 18ஆம் தேதி கந்தசஷ்டி திருவிழாவாக முருகனின் அறுபடை வீடுகளில் கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்வு தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கோலாகலமாக கொண்டாடப்படும்.
சூரசம்ஹார நிகழ்வை முன்னிட்டு, அறுபடை வீடுகளில் 2ஆம் வீடான திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று (ஐப்பசி மாதம் 27ஆம் தேதி) முருகன், வள்ளி, தெய்வானை முன் யாகசாலை நடத்தப்பட்டு கந்த சஷ்டி திருவிழா தொடங்கியது.
மனிதர்கள் மீது மிதித்து ஓடும் மாடுகள்.. ம.பி.யில் வித்தியாசமான தீபாவளி கொண்டாட்டம்.!
இன்று முதல் முருக பக்தர்கள் சஷ்டி விரதமிருக்க துவங்கி விட்டனர். 5 நாள் விரதம் இருக்கும் பகதர்கள் சூரசம்ஹார நிகழ்வு முடிந்த பிறகு தங்கள் விரதத்தை கலைப்பர். இந்த 5 நாளும் வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் தங்கி இருப்பர்.
திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் தற்போது கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால், கோவில் வளாகம் வெளியே பகதர்கள் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 18ஆம் தேதி கார்த்திகை மாதம் 2ஆம் நாள் சூரசம்கார நிகழ்வு கோலாகலமாக நடைபெற இருப்பதால், பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை தற்போதே மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள ஆரம்பித்து விட்டனர்.
சென்னை : கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் (88) காலமானார். நிமோனியா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்து வந்த போப் பிரான்சிஸ்,…
டெல்லி : அசலை மிஞ்சும் வகையில் புது வகையான ரூ.500 கள்ள நோட்டு புழக்கத்துக்கு வந்துள்ளதாக பொதுமக்களுக்கு மத்திய உள்துறை…
நாகர்கோவில் : கடந்த 2014ஆம் ஆண்டு கன்னியாகுமரி மேற்கு பகுதியில் உள்ள மிடாலம் பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த அரசு புறம்போக்கு…
சென்னை : 2025-26ஆம் ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்பொழுது,…
சென்னை: இன்றைய சட்டப்பேரவையில் கேள்வி பதில் நேரத்தில் பேசிய, எடப்பாடி பழனிசாமி மாற்றம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடையே காரசார வாதம்…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) 2024-25 சீசனுக்கான (அக்டோபர் 1, 2024 முதல் செப்டம்பர் 30,…