விளையாட்டு வினையானது! ஆமணக்கு காயை சாப்பிட்ட 11 சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதி!
ஆமணக்கு காயை சாப்பிட்ட 11 சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதி.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே, சிறுவர் சிறுமிகள் வயல்வெளியில் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். இவர்களது பெற்றோர்கள் வேலைக்கு சென்ற நிலையில், அங்கு விளையாடிக் கொண்டிருந்த 11 சிறுவர்கள் விளையாட்டுத்தனமாக அங்கிருந்த ஆமணக்கு காய்களை சாப்பிட்டுள்ளனர்.
இதனையடுத்து, அன்றிரவே நள்ளிரவு சிறுவர்களுக்கு வாந்தி பேதி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, சிறுவர்களின் பெற்றோர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ள நிலையில், அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.